• May 18 2024

332மில்லியன் டொலர்கள் மோசடி–மஹிந்த குடும்பத்தின் இரகசியங்களை வெளியிட்ட ஜே.வி.பி! SamugamMedia

Sharmi / Feb 14th 2023, 10:13 am
image

Advertisement

கடந்த ஆட்சிக்காலத்தில் ராஜபக்சவினரால் மாத்திரம் முந்நூற்று முப்பத்திரண்டு மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

நம் நாட்டில் அரசாங்க சொத்துக்களை திருடியவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை.சீனாவில் ராக்கெட் செய்வதற்காக முந்நூற்று முப்பத்திரண்டு மில்லியன் டொலர்கள் மகிந்தவின் மகனால் செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் இன்று சீனாவும் அந்த ராக்கெட் எங்கே போனது என்று தேடிக்கொண்டிருக்கின்றது. மோசடி செய்யப்பட்ட பணம் எங்கே என்று நாடு தேடிக்கொண்டிருக்கின்றது.
ஆனால் மஹிந்தவின் இளைய மகன் கடன் கொடியை உயர்த்தி, நாட்டின் பணத்தை செலுத்தி சிங்கராஜாவில் விடுதி கட்டியுள்ளார்.

கல்யாணத்துக்கு பிறகு முப்பத்தாறு கோடியில் கோட்டே துவா வீதியில் வீடு வாங்கினார்.மறுபுறம் உள்ள நிலத்தையும் நாற்பத்தைந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார். தற்போது அவரிடம் மூன்று நிலங்கள் உள்ளன.

தற்போது விஞ்ஞானிகளின் முயற்சியும் தோல்வியடைந்தது என தகவல் வெளியாகிறது. இவற்றில் இருந்து இவர்களின் அறிவியல் எப்படி என்றும் தெரிந்துக்கொள்ளலாம்
மேலும் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 பவுண் தங்கச் சங்கிலி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

332மில்லியன் டொலர்கள் மோசடி–மஹிந்த குடும்பத்தின் இரகசியங்களை வெளியிட்ட ஜே.வி.பி SamugamMedia கடந்த ஆட்சிக்காலத்தில் ராஜபக்சவினரால் மாத்திரம் முந்நூற்று முப்பத்திரண்டு மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.நம் நாட்டில் அரசாங்க சொத்துக்களை திருடியவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை.சீனாவில் ராக்கெட் செய்வதற்காக முந்நூற்று முப்பத்திரண்டு மில்லியன் டொலர்கள் மகிந்தவின் மகனால் செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.ஆனால் இன்று சீனாவும் அந்த ராக்கெட் எங்கே போனது என்று தேடிக்கொண்டிருக்கின்றது. மோசடி செய்யப்பட்ட பணம் எங்கே என்று நாடு தேடிக்கொண்டிருக்கின்றது.ஆனால் மஹிந்தவின் இளைய மகன் கடன் கொடியை உயர்த்தி, நாட்டின் பணத்தை செலுத்தி சிங்கராஜாவில் விடுதி கட்டியுள்ளார்.கல்யாணத்துக்கு பிறகு முப்பத்தாறு கோடியில் கோட்டே துவா வீதியில் வீடு வாங்கினார்.மறுபுறம் உள்ள நிலத்தையும் நாற்பத்தைந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார். தற்போது அவரிடம் மூன்று நிலங்கள் உள்ளன.தற்போது விஞ்ஞானிகளின் முயற்சியும் தோல்வியடைந்தது என தகவல் வெளியாகிறது. இவற்றில் இருந்து இவர்களின் அறிவியல் எப்படி என்றும் தெரிந்துக்கொள்ளலாம் மேலும் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 பவுண் தங்கச் சங்கிலி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement