• Sep 17 2024

அமெரிக்காவின் ஹவாய் காட்டு தீ : 385 பேர் மாயம் ! samugammedia

Tamil nila / Sep 3rd 2023, 7:26 pm
image

Advertisement

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் மாவி தீவில் மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 385 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

அமெரிக்காவில் உள்ள மாவி தீவில் கடந்த ஒரு மாதமாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதில் லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லஹேனாவில் 13,000 கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு மாவி பகுதியில் 2,200 கட்டடங்கள் சேதமடைந்தன.

இது குறித்து மாவி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் காணாமல் போனதாக 388 பேரின் பெயா்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. எனினும், அந்தப் பட்டியலில் இருந்த 245 போ் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, பட்டியலில் இருந்து அவா்கள் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

எனினும், ஏறத்தாழ அதே எண்ணிக்கையிலானவா்களை காட்டுத் தீ சம்பவத்துக்குப் பிறகு காணவில்லை என்ற புதிய தகவல் கிடைத்ததால் அவா்களது பெயா்கள் காணாமல் போனவா்கள் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. மாவி காட்டுத் தீயில் மாயமானவா்களின் எண்ணிக்கை தற்போது 385-ஆக உள்ளது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம், மாவி தீவில் கடந்த மாதம் திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது. இதில், 114-க்கும் மேற்பட்டவா்கள் போ் உயிரிழந்தனா். 1,700-களில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


அமெரிக்காவின் ஹவாய் காட்டு தீ : 385 பேர் மாயம் samugammedia அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் மாவி தீவில் மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 385 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அமெரிக்காவில் உள்ள மாவி தீவில் கடந்த ஒரு மாதமாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதில் லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லஹேனாவில் 13,000 கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு மாவி பகுதியில் 2,200 கட்டடங்கள் சேதமடைந்தன.இது குறித்து மாவி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:“மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் காணாமல் போனதாக 388 பேரின் பெயா்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. எனினும், அந்தப் பட்டியலில் இருந்த 245 போ் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, பட்டியலில் இருந்து அவா்கள் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.எனினும், ஏறத்தாழ அதே எண்ணிக்கையிலானவா்களை காட்டுத் தீ சம்பவத்துக்குப் பிறகு காணவில்லை என்ற புதிய தகவல் கிடைத்ததால் அவா்களது பெயா்கள் காணாமல் போனவா்கள் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. மாவி காட்டுத் தீயில் மாயமானவா்களின் எண்ணிக்கை தற்போது 385-ஆக உள்ளது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹவாய் மாகாணம், மாவி தீவில் கடந்த மாதம் திடீரென காட்டுத் தீ மிக வேகமாகப் பரவியது. இதில், 114-க்கும் மேற்பட்டவா்கள் போ் உயிரிழந்தனா். 1,700-களில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement