• Jan 24 2025

வெள்ளத்தில் மூழ்கிய 40 ஏக்கர் வயல் காணிகள்; கேள்விக்குறியில் வாழ்வாதாரம்! வவுனியா விவசாயிகள் கவலை

Chithra / Jan 23rd 2025, 11:39 am
image

 

வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக செட்டிக்குளம், ஆண்டியாபுளியங்குளம், ராமையன்குளம் பகுதியில்  சுமார் 40 ஏக்கர் வயல் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக வவுனியா - பாவற்குளம் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு கீழுள்ள வயல் நிலங்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளன.

மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நேற்று முதல் வெள்ள நீர் தொடர்ச்சியாக பயிர்களுக்கு மேலாக மூடி பாய்ந்து வருவதாகவும் இதனால் தமது விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


வெள்ளத்தில் மூழ்கிய 40 ஏக்கர் வயல் காணிகள்; கேள்விக்குறியில் வாழ்வாதாரம் வவுனியா விவசாயிகள் கவலை  வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர் மழை காரணமாக செட்டிக்குளம், ஆண்டியாபுளியங்குளம், ராமையன்குளம் பகுதியில்  சுமார் 40 ஏக்கர் வயல் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.குறிப்பாக வவுனியா - பாவற்குளம் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு கீழுள்ள வயல் நிலங்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளன.மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இதேவேளை நேற்று முதல் வெள்ள நீர் தொடர்ச்சியாக பயிர்களுக்கு மேலாக மூடி பாய்ந்து வருவதாகவும் இதனால் தமது விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement