• Nov 26 2024

மட்டக்களப்பில் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு...! விவசாயிகளுக்கு நட்டஈடு...!விடுக்கப்பட்ட கோரிக்கை...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 3:33 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 50,000 ஏக்கர் விவசாய காணிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையின் தலைவர்  சந்திரசேகரம் சந்திரமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ள நிலவரத்தில் மிஞ்சும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்களுக்கு தற்போதைய உற்பத்திச் செலவு கிலோ ஒன்றுக்கு 145 ரூபாயாக உள்ளது ஆக குறைந்தது 175 ரூபாய்க்கு அந்த நெல்லை நாங்கள் விற்றால்தான் நாங்கள் ஓரளவாவது நஸ்டத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளமுடியும் எனவும் இதன்போது தெரிவித்தனர்.

இன்று மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையின் செயலாளர் இளையதம்பி கிரேஸ்குமார் இணைந்திருந்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,

இன்று ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தும் காரணமாக எமது விவசாயிகளின் சுமார் 50,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது அது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளரை சந்தித்து அதற்குரிய நஷ்ட ஈட்டிற்குரிய வேலைகளை நெறிப்படுத்துமாறும் அவரிடம் கேட்டிருக்கின்றோம்.

அது தவிர ஜனாதிபதி அவர்களுக்கும், ஆளுநர், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாம் அறிவித்துள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரத்தில் மிஞ்சும் நெல்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எங்களுக்கு தற்போதைய உற்பத்திச் செலவு கிலோ ஒன்றுக்கு 145 ரூபாயாக உள்ளது ஆக குறைந்தது 175 ரூபாய்க்கு அந்த நெல்லை நாங்கள் விற்றால்தான் நாங்கள் ஓரளவாவது லாபங்கள் கிடைக்கும்.

இந்த விடயங்களையும் நாம் அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் நல்ல முடிவு இதற்கு கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம் இது தவிர நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், கமநல காப்புறுதி சபையின் உதவி பணிப்பாளர் ஆகியோரையும் சந்தித்து மாவட்டத்தில் உள்ள குளங்களின் நிலைமைகள் மற்றும் காப்புறுதி தொடர்பான நஷ்ட ஈடு வழங்க வேண்டிய எவ்வாறு வழங்க வேண்டும் அநேகமாக அழிவடைந்த வயல்களுக்கான முழு நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு எமது விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் கிரேஸ்குமார்,

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களில் பெய்த மழையினால் பெருமளவான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றது ஆகவே எமது அரசாங்கம் விவசாயிகளை கைவிடக் கூடாது ஏனென்றால் கடந்த காலங்களில் நிவாரணங்களும் காப்புறுதிகளும் மிகவும் ஒரு பின் தங்கிய நிலையிலே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நேற்றும் கூட எங்களுடைய அரசாங்க அதிபர் ஊடான சில திணைக்களங்கள் அதாவது நீர்ப்பாசன திணைக்களம் அதேபோன்று காப்புறுதி சபை உடனடியாக கள விஜயம் மேற்கொண்டு விவசாயிகளுக்குரிய நஷ்ட ஈடுகளை மதிப்பீடு செய்கின்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இந்த போக அறுவடைக்கு முன்பு திணைக்களங்களை அனுப்பி அதற்கான மதிப்பீடுகளை செய்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதேபோன்று வருகின்ற அறுவடை காலங்களில் நெல் கொள்வனவை நெல் சந்தைப்படுத்தல் சபை மேற்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு வருகின்ற வாரம் கூட்டத்தை கூட்டி அதற்கான ஆயத்த வேலைகளை செய்வதாகவும் அரசாங்க அதிபரினால் எமக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் இதில் மிகத் தெளிவாக ஒரு உத்தரவாதத்தை தர வேண்டும் இந்த நெல்லினுடைய உத்தரவாத விலையினையும் அதேபோன்று விவசாயிகளுக்கான நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு. விவசாயிகளுக்கு நட்டஈடு.விடுக்கப்பட்ட கோரிக்கை.samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தில் 50,000 ஏக்கர் விவசாய காணிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையின் தலைவர்  சந்திரசேகரம் சந்திரமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.வெள்ள நிலவரத்தில் மிஞ்சும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்களுக்கு தற்போதைய உற்பத்திச் செலவு கிலோ ஒன்றுக்கு 145 ரூபாயாக உள்ளது ஆக குறைந்தது 175 ரூபாய்க்கு அந்த நெல்லை நாங்கள் விற்றால்தான் நாங்கள் ஓரளவாவது நஸ்டத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளமுடியும் எனவும் இதன்போது தெரிவித்தனர்.இன்று மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையின் செயலாளர் இளையதம்பி கிரேஸ்குமார் இணைந்திருந்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,இன்று ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தும் காரணமாக எமது விவசாயிகளின் சுமார் 50,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது அது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளரை சந்தித்து அதற்குரிய நஷ்ட ஈட்டிற்குரிய வேலைகளை நெறிப்படுத்துமாறும் அவரிடம் கேட்டிருக்கின்றோம்.அது தவிர ஜனாதிபதி அவர்களுக்கும், ஆளுநர், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாம் அறிவித்துள்ளோம்.தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரத்தில் மிஞ்சும் நெல்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எங்களுக்கு தற்போதைய உற்பத்திச் செலவு கிலோ ஒன்றுக்கு 145 ரூபாயாக உள்ளது ஆக குறைந்தது 175 ரூபாய்க்கு அந்த நெல்லை நாங்கள் விற்றால்தான் நாங்கள் ஓரளவாவது லாபங்கள் கிடைக்கும்.இந்த விடயங்களையும் நாம் அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் நல்ல முடிவு இதற்கு கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம் இது தவிர நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், கமநல காப்புறுதி சபையின் உதவி பணிப்பாளர் ஆகியோரையும் சந்தித்து மாவட்டத்தில் உள்ள குளங்களின் நிலைமைகள் மற்றும் காப்புறுதி தொடர்பான நஷ்ட ஈடு வழங்க வேண்டிய எவ்வாறு வழங்க வேண்டும் அநேகமாக அழிவடைந்த வயல்களுக்கான முழு நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு எமது விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் கிரேஸ்குமார்,மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களில் பெய்த மழையினால் பெருமளவான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றது ஆகவே எமது அரசாங்கம் விவசாயிகளை கைவிடக் கூடாது ஏனென்றால் கடந்த காலங்களில் நிவாரணங்களும் காப்புறுதிகளும் மிகவும் ஒரு பின் தங்கிய நிலையிலே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.நேற்றும் கூட எங்களுடைய அரசாங்க அதிபர் ஊடான சில திணைக்களங்கள் அதாவது நீர்ப்பாசன திணைக்களம் அதேபோன்று காப்புறுதி சபை உடனடியாக கள விஜயம் மேற்கொண்டு விவசாயிகளுக்குரிய நஷ்ட ஈடுகளை மதிப்பீடு செய்கின்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.இந்த போக அறுவடைக்கு முன்பு திணைக்களங்களை அனுப்பி அதற்கான மதிப்பீடுகளை செய்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதேபோன்று வருகின்ற அறுவடை காலங்களில் நெல் கொள்வனவை நெல் சந்தைப்படுத்தல் சபை மேற்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு வருகின்ற வாரம் கூட்டத்தை கூட்டி அதற்கான ஆயத்த வேலைகளை செய்வதாகவும் அரசாங்க அதிபரினால் எமக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.அரசாங்கம் இதில் மிகத் தெளிவாக ஒரு உத்தரவாதத்தை தர வேண்டும் இந்த நெல்லினுடைய உத்தரவாத விலையினையும் அதேபோன்று விவசாயிகளுக்கான நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement