• Jan 06 2025

யாழ்ப்பாணத்தில் மழை காரணமாக 543 பேர் பாதிப்பு!

Tamil nila / Dec 14th 2024, 9:14 pm
image

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1755 குடும்பங்களை சேர்ந்த 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அதுபோல சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இரு குடும்பத்தைச் 09பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் இரண்டும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 135பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும், இரண்டு அடிப்படை கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு நிலையங்களில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 123பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 54பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 336பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மழை காரணமாக 543 பேர் பாதிப்பு நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1755 குடும்பங்களை சேர்ந்த 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.அந்தவகையில் வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.அதுபோல சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இரு குடும்பத்தைச் 09பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் இரண்டும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 135பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும், இரண்டு அடிப்படை கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு நிலையங்களில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 123பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 54பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 336பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement