• May 19 2024

ஈரானில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல்- 6 பேர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Jul 8th 2023, 9:23 pm
image

Advertisement

ஈரானின் தென்கிழக்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் தற்கொலைப் படையினர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நான்கு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Sistan-Baluchistan மாகாணத்தின் தலைநகரான Zahedan இல் இந்த தாக்குதல் இன்று நடந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு, சரியான ஹிஜாப் அணியாததற்காக ஈரானிய அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குர்திஷ் பெண், பொலிசாரின் தாக்குதலின் போது உயிரிழந்தார் என நாடு தழுவிய ரீதியில் போராட்டம் வெடித்தது.

இதுவரை 80 முதல் 90 ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கொல்லப்பட்டதையடுத்து, ஜெகடன் நகரில் பதற்றம் அதிகரித்துள்ளது.

குறித்த இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக பொலிஸாரை இலக்கு வைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சிஸ்தான்-பலூசிஸ்தான், ஈரானின் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்றாகும் மற்றும் போதைப்பொருள் கடத்தும் முக்கிய பாதையாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.


ஈரானில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல்- 6 பேர் உயிரிழப்பு samugammedia ஈரானின் தென்கிழக்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் தற்கொலைப் படையினர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நான்கு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.Sistan-Baluchistan மாகாணத்தின் தலைநகரான Zahedan இல் இந்த தாக்குதல் இன்று நடந்துள்ளது.மேலும் கடந்த ஆண்டு, சரியான ஹிஜாப் அணியாததற்காக ஈரானிய அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குர்திஷ் பெண், பொலிசாரின் தாக்குதலின் போது உயிரிழந்தார் என நாடு தழுவிய ரீதியில் போராட்டம் வெடித்தது.இதுவரை 80 முதல் 90 ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கொல்லப்பட்டதையடுத்து, ஜெகடன் நகரில் பதற்றம் அதிகரித்துள்ளது.குறித்த இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக பொலிஸாரை இலக்கு வைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சிஸ்தான்-பலூசிஸ்தான், ஈரானின் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்றாகும் மற்றும் போதைப்பொருள் கடத்தும் முக்கிய பாதையாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement