• Nov 19 2024

ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 83 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி..!

Sharmi / Sep 17th 2024, 1:18 pm
image

எதிர்வரும் 21 ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  புத்தளம் மாவட்டத்தில் 683,000 பேர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளம் மாவட்டத்தில்  14,967 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்களை செய்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள 5 தேர்தல் தொகுதிகளிலும் 470 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாக்குகளை எண்ணும் பணிகளுக்கென புத்தளம் சென்.அன்றூஸ், பாத்திமா மகளிர் கல்லூரி மற்றம் செய்னப் ஆரம்ப பாடசாலை என்பன தயார்படுத்தப்படுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

54 கணக்கெடுப்பு நிலையங்ளும் 8 தபால் மூல கணக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்படுவதாகவும், தபால் மூல வாக்குகள்  மாலை 7.00 மணிக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும், அது போன்று ஏனைய வாக்குள் எண்ணும் பணிகள் இரவு 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பூக்குளம் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் என்பன வில்பத்து வனப்பகுதி ஊடாக கொண்டு செல்ல தேவையான அனுமதியினை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பெற்றுள்ளதாகவும், கற்பிட்டி முகத்துவார வாக்குச் சாவடிக்கு படகுகள் மூலம் அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த புத்தளம் மாவட்ட செயலாளர், ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறும், மிகவும் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக மாவட்ட மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 83 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி. எதிர்வரும் 21 ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  புத்தளம் மாவட்டத்தில் 683,000 பேர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,புத்தளம் மாவட்டத்தில்  14,967 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்களை செய்துள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் உள்ள 5 தேர்தல் தொகுதிகளிலும் 470 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாக்குகளை எண்ணும் பணிகளுக்கென புத்தளம் சென்.அன்றூஸ், பாத்திமா மகளிர் கல்லூரி மற்றம் செய்னப் ஆரம்ப பாடசாலை என்பன தயார்படுத்தப்படுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.54 கணக்கெடுப்பு நிலையங்களும் 8 தபால் மூல கணக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்படுவதாகவும், தபால் மூல வாக்குகள்  மாலை 7.00 மணிக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும், அது போன்று ஏனைய வாக்குகள் எண்ணும் பணிகள் இரவு 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, பூக்குளம் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் என்பன வில்பத்து வனப்பகுதி ஊடாக கொண்டு செல்ல தேவையான அனுமதியினை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பெற்றுள்ளதாகவும், கற்பிட்டி முகத்துவார வாக்குச் சாவடிக்கு படகுகள் மூலம் அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த புத்தளம் மாவட்ட செயலாளர், ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறும், மிகவும் அமைதியான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக மாவட்ட மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement