• May 17 2024

விஐபிக்களின் பாதுகாப்புக்காக மட்டும் 7000 பொலிஸார் கடமையில்! samugammedia

Chithra / Aug 24th 2023, 11:57 am
image

Advertisement

விஐபிக்களின் பாதுகாப்புக்காக ஏழாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் ஜகத் குமார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்களில் ஐந்நூற்று அறுபத்து மூன்று பேர் அமைச்சர்களுக்கும் ஆயிரத்து எண்ணூற்று பதினொரு பேர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணிபுரிகின்றனர்.

 மேலும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத உயரதிகாரிகளுக்காக இரண்டாயிரத்து நூற்று எழுபத்தாறு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பல பிரிவுகள் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத உயரடுக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.


விஐபிக்களின் பாதுகாப்புக்காக மட்டும் 7000 பொலிஸார் கடமையில் samugammedia விஐபிக்களின் பாதுகாப்புக்காக ஏழாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் ஜகத் குமார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர்களில் ஐந்நூற்று அறுபத்து மூன்று பேர் அமைச்சர்களுக்கும் ஆயிரத்து எண்ணூற்று பதினொரு பேர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணிபுரிகின்றனர். மேலும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத உயரதிகாரிகளுக்காக இரண்டாயிரத்து நூற்று எழுபத்தாறு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பல பிரிவுகள் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத உயரடுக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement