• Jan 13 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 பேர் கைது! சபையில் அமைச்சர் தெரிவிப்பு

Chithra / Jan 7th 2025, 2:14 pm
image

 

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இன்று நாடாளுமன்றில் மேலும் தெரிவிக்கையில்

குற்றவியல் விசாரணைகள் திணைக்களம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர் நீதிமன்றில் 14 வழக்குகளில் 100 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் அதி விசேட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், சனல் 4 ஊடாக வெளியான விடயங்கள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

அந்த விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 

நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, 12 சிவில் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 காவல்துறை அதிகாரிகள், 3 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 பேர் கைது சபையில் அமைச்சர் தெரிவிப்பு  உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.அமைச்சர் இன்று நாடாளுமன்றில் மேலும் தெரிவிக்கையில்குற்றவியல் விசாரணைகள் திணைக்களம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, உயர் நீதிமன்றில் 14 வழக்குகளில் 100 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் அதி விசேட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.மேலும், சனல் 4 ஊடாக வெளியான விடயங்கள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.அந்த விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, 12 சிவில் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 காவல்துறை அதிகாரிகள், 3 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement