• Sep 17 2024

75வது சுதந்திரதின கொண்டாட்டம் இம்முறை யாழில் -வெளியான விசேட அறிவிப்பு!

Sharmi / Dec 28th 2022, 1:36 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்

இது தொடர்பில்  ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக  பெப்ரவரி நான்காம்  திகதி கொழும்பில் 75 வது சுதந்திரதின நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில்  அதனுடைய ஒரு முழுமையான செயற்பாட்டு  நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும்  முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கான ஆரம்ப கலந்தரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கலாச்சார மத்திய நிலையத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில்  இருக்கிற ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள்  மத்திய கலாச்சார அமைச்சுடன்   இணைந்ததாக  கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அத்தோடு ஒட்டியதாக  சுதந்திரதின நிகழ்வினை  முக்கியமாக மாகாண மட்டத்திலே  இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்வதற்கு ஏற்றவாறாக  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதால் பெரியளவில் இடம்பெற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

75வது சுதந்திரதின கொண்டாட்டம் இம்முறை யாழில் -வெளியான விசேட அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்இது தொடர்பில்  ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.குறிப்பாக  பெப்ரவரி நான்காம்  திகதி கொழும்பில் 75 வது சுதந்திரதின நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில்  அதனுடைய ஒரு முழுமையான செயற்பாட்டு  நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும்  முன்னெடுக்கப்படுகின்றன.அதற்கான ஆரம்ப கலந்தரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கலாச்சார மத்திய நிலையத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில்  இருக்கிற ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள்  மத்திய கலாச்சார அமைச்சுடன்   இணைந்ததாக  கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅத்தோடு ஒட்டியதாக  சுதந்திரதின நிகழ்வினை  முக்கியமாக மாகாண மட்டத்திலே  இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்வதற்கு ஏற்றவாறாக  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதால் பெரியளவில் இடம்பெற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement