• May 07 2025

வீதியைக் கடந்து சென்ற 8 வயது சிறுமி மீது மோதிய லொறி - பறிபோனது உயிர்

Chithra / May 6th 2025, 8:58 am
image


அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று (05) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதில் படுகாயமடைந்த சிறுமி, அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமி 8 வயதுடைய அம்பன்பொல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியைக் கடந்து சென்ற 8 வயது சிறுமி மீது மோதிய லொறி - பறிபோனது உயிர் அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.நேற்று (05) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி, அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.உயிரிழந்த சிறுமி 8 வயதுடைய அம்பன்பொல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.உயிரிழந்த சிறுமியின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement