• May 06 2024

கண்ணிவெடிக்கு 9 குழந்தைகள் பலி- ஆப்கனில் துயர சம்பவம்..!samugammedia

mathuri / Apr 2nd 2024, 10:12 pm
image

Advertisement

கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை எடுத்து விளையாடியபோது, அது வெடித்ததில் 9 குழந்தைகள் இறந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தில் உள்ள ஜெரோ மாவட்டத்தில் 5 முதல் 10 வயதுடைய 9 குழந்தைகள் இணைந்து விளையாடிய போது அவர்களின் கையில் கண்ணிவெடி ஒன்று கிடைத்து உள்ளது. அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கண்ணிவெடி திடீரென வெடித்ததில் அங்கிருந்த 9 குழந்தைகளும் பலியாகினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கஸ்னி மாகாணத்துக்கான தாலிபன்களின் தகவல் மற்றும் கலாசாரப் பிரிவு இயக்குநா் ஹமீதுல்லா நிஜார், “உயிரிழந்த குழந்தைகளில் 4 சிறுமிகளும் அடக்கம். இந்த கண்ணிவெடிகள் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக போா் நடைபெற்றுவந்த ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றால் சிறுவா்கள் அவ்வப்போது உயிரிழந்து வருகின்றனா். மேலும் உடலளவிலும் பாதிப்புகள் உருவாகின்றன. குடும்ப வருவாய்க்காக பழைய பொருள்களை சேகரிக்கும் குழந்தைகள், இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.


கண்ணிவெடிக்கு 9 குழந்தைகள் பலி- ஆப்கனில் துயர சம்பவம்.samugammedia கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை எடுத்து விளையாடியபோது, அது வெடித்ததில் 9 குழந்தைகள் இறந்துள்ளன.ஆப்கானிஸ்தானில் கடந்த 2021இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.இந்த நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தில் உள்ள ஜெரோ மாவட்டத்தில் 5 முதல் 10 வயதுடைய 9 குழந்தைகள் இணைந்து விளையாடிய போது அவர்களின் கையில் கண்ணிவெடி ஒன்று கிடைத்து உள்ளது. அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கண்ணிவெடி திடீரென வெடித்ததில் அங்கிருந்த 9 குழந்தைகளும் பலியாகினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து கஸ்னி மாகாணத்துக்கான தாலிபன்களின் தகவல் மற்றும் கலாசாரப் பிரிவு இயக்குநா் ஹமீதுல்லா நிஜார், “உயிரிழந்த குழந்தைகளில் 4 சிறுமிகளும் அடக்கம். இந்த கண்ணிவெடிகள் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக போா் நடைபெற்றுவந்த ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றால் சிறுவா்கள் அவ்வப்போது உயிரிழந்து வருகின்றனா். மேலும் உடலளவிலும் பாதிப்புகள் உருவாகின்றன. குடும்ப வருவாய்க்காக பழைய பொருள்களை சேகரிக்கும் குழந்தைகள், இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement