• May 04 2024

தாயகம் திரும்பும் முருகன், பாயஸ், ஜெயக்குமார் - திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை..!samugammedia

mathuri / Apr 2nd 2024, 9:15 pm
image

Advertisement

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

நாளை காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள் மூவரும் வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மூவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பும் முருகன், பாயஸ், ஜெயக்குமார் - திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை.samugammedia ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.நாளை காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள் மூவரும் வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மூவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement