• Nov 27 2024

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 9,404 பேர் பாதிப்பு..!

Sharmi / Nov 26th 2024, 9:28 pm
image

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2,634 குடும்பங்களை சேர்ந்த 9,404பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் மூன்று உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 416 குடும்பங்களைச் சேர்ந்த 1355 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 371 குடும்பங்களை சேர்ந்த 1,462 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 115 குடும்பங்களை சேர்ந்த 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 29 குடும்பங்களை சேர்ந்த 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 573 குடும்பங்களை சேர்ந்த 2,335 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 141 குடும்பங்களை சேர்ந்த 508 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 266 குடும்பங்களை சேர்ந்த 932 பேர் பல அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களை சேர்ந்த 294பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 470 குடும்பங்களை சேர்ந்த 1520 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவிலும், ஒரு சிறு வணிக நிலையம் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 9,404 பேர் பாதிப்பு. யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2,634 குடும்பங்களை சேர்ந்த 9,404பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் மூன்று உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 416 குடும்பங்களைச் சேர்ந்த 1355 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 371 குடும்பங்களை சேர்ந்த 1,462 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 115 குடும்பங்களை சேர்ந்த 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 29 குடும்பங்களை சேர்ந்த 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 573 குடும்பங்களை சேர்ந்த 2,335 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 141 குடும்பங்களை சேர்ந்த 508 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 266 குடும்பங்களை சேர்ந்த 932 பேர் பல அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களை சேர்ந்த 294பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 470 குடும்பங்களை சேர்ந்த 1520 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவிலும், ஒரு சிறு வணிக நிலையம் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement