• May 19 2024

கடலுக்கடியில் மூழ்கும் அழகிய நகரம்...! ஆய்வில் அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / May 25th 2023, 5:15 pm
image

Advertisement

இரவை பகலாக்கும் வண்ண விளக்குகள், வானளாவிய கட்டிடங்கள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்கள் என அழகுற காட்சியளிக்கும் ஒன்றாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் திகழ்கின்றது. 

இவ்வாறாக அழகிய நகரம் வான் உயர்ந்த கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக  மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் நியூயார்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் காணப்படுவதால் அந்த கட்டிடங்களின் எடை காரணமாக பூமிக்கு அழுத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால், ஆண்டுக்கு 1 முதல் 2 மில்லி மீட்டர் அளவிற்கு நியூயார்க்  நகரம் மூழ்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து செல்வதால் நியூயார்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்து வருவதாகவும் குறித்த  ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடலுக்கடியில் மூழ்கும் அழகிய நகரம். ஆய்வில் அதிர்ச்சி தகவல் samugammedia இரவை பகலாக்கும் வண்ண விளக்குகள், வானளாவிய கட்டிடங்கள், சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்கள் என அழகுற காட்சியளிக்கும் ஒன்றாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் திகழ்கின்றது. இவ்வாறாக அழகிய நகரம் வான் உயர்ந்த கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக  மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் நியூயார்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் காணப்படுவதால் அந்த கட்டிடங்களின் எடை காரணமாக பூமிக்கு அழுத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு 1 முதல் 2 மில்லி மீட்டர் அளவிற்கு நியூயார்க்  நகரம் மூழ்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து செல்வதால் நியூயார்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்து வருவதாகவும் குறித்த  ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement