• May 02 2024

இளைஞனின் வயிற்றில் இருந்த வோட்கா போத்தல்! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் SamugamMedia

Chithra / Mar 11th 2023, 8:45 am
image

Advertisement

நேபாளத்தில் 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த வோட்கா பாட்டிலைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நேபாளத்தில் குஜாரா நகராட்சியைச் சேர்ந்த நுர்சத் மன்சூரி என்பவருக்கு அண்மையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


அதில் அவருடைய வயிற்றில் வோட்கா பாட்டில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இரண்டரை மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மன்சூரி வயிற்றில் இருந்த வோட்கா பாட்டிலை வெற்றிகரமாக அகற்றினர். 

பாட்டில் அவரது குடலைத் துண்டித்து மலம் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.


மன்சூரி நண்பர்கள் அவரைக் குடிக்க வைத்துவிட்டு, மலக்குடல் வழியாக பாட்டிலை வயிற்றில் வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்பரை காவல்துறையினர் கைது செய்ததோடு மன்சூரியின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இளைஞனின் வயிற்றில் இருந்த வோட்கா போத்தல் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் SamugamMedia நேபாளத்தில் 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த வோட்கா பாட்டிலைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.நேபாளத்தில் குஜாரா நகராட்சியைச் சேர்ந்த நுர்சத் மன்சூரி என்பவருக்கு அண்மையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் அவருடைய வயிற்றில் வோட்கா பாட்டில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் இரண்டரை மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மன்சூரி வயிற்றில் இருந்த வோட்கா பாட்டிலை வெற்றிகரமாக அகற்றினர். பாட்டில் அவரது குடலைத் துண்டித்து மலம் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.மன்சூரி நண்பர்கள் அவரைக் குடிக்க வைத்துவிட்டு, மலக்குடல் வழியாக பாட்டிலை வயிற்றில் வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்பரை காவல்துறையினர் கைது செய்ததோடு மன்சூரியின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement