• May 03 2024

மட்டக்களப்பில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு...!

Sharmi / Apr 12th 2024, 10:54 am
image

Advertisement

மட்டக்களப்பில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் மக்களின் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகை தரும் நிலையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த முதலையை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு. மட்டக்களப்பில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் மக்களின் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகை தரும் நிலையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.குறித்த முதலையை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.அதேவேளை, தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement