மேற்கு ஜேர்மனிய மாநிலமான ஹெஸ்ஸெஹாஸில் உள்ள லிம்பர்க் அன் டெர் லான் குடியிருப்பாளர்கள் அதன் 700 புறாக்களை அழிக்க வாக்களித்துள்ளனர்.
குறிப்பாக 2023 நவம்பரில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அப்போது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்வருடத்தில் ஜூன் 9 அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 53 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஏறக்குறைய 07 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆம் என்று வாக்களித்துள்ளனர்.
“இன்றைய முடிவு எங்களால் கணிக்க முடியாததாக இருந்தது. குடிமக்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, விலங்குகளை ஒரு பால்கனர் மூலம் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்” என்று மேயர் மரியஸ் ஹான் ஜெர்மன் செய்தி தாளிடம் பேட்டியளித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விலங்குகள் நம்மைத் தொந்தரவு செய்கின்றன என்பதற்காகவோ அல்லது அவை ஒரு தொல்லையாக கருதுகிறோம் என்பதற்காக அவற்றை கொல்ல முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர்.
புறாக்களை அகற்றுவதற்கான திட்டம் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ளது. குறிப்பாக சுவிட்சர்லாந்து, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் புறாக்களின் முட்டைகளை அப்புறுப்படுத்துவதற்காக புறா மாடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பிரித்தானியாவில் புறா தொல்லை உள்ள பகுதிகளுக்கு இரையை பிடிக்கும் பறவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புறாக்களுக்காக நடத்தப்பட்ட வித்தியாசமான வாக்களிப்பு மேற்கு ஜேர்மனிய மாநிலமான ஹெஸ்ஸெஹாஸில் உள்ள லிம்பர்க் அன் டெர் லான் குடியிருப்பாளர்கள் அதன் 700 புறாக்களை அழிக்க வாக்களித்துள்ளனர்.குறிப்பாக 2023 நவம்பரில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அப்போது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்வருடத்தில் ஜூன் 9 அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் 53 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஏறக்குறைய 07 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆம் என்று வாக்களித்துள்ளனர்.“இன்றைய முடிவு எங்களால் கணிக்க முடியாததாக இருந்தது. குடிமக்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, விலங்குகளை ஒரு பால்கனர் மூலம் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்” என்று மேயர் மரியஸ் ஹான் ஜெர்மன் செய்தி தாளிடம் பேட்டியளித்துள்ளார்.இந்த அறிவிப்பால் விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விலங்குகள் நம்மைத் தொந்தரவு செய்கின்றன என்பதற்காகவோ அல்லது அவை ஒரு தொல்லையாக கருதுகிறோம் என்பதற்காக அவற்றை கொல்ல முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர்.புறாக்களை அகற்றுவதற்கான திட்டம் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ளது. குறிப்பாக சுவிட்சர்லாந்து, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் புறாக்களின் முட்டைகளை அப்புறுப்படுத்துவதற்காக புறா மாடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் பிரித்தானியாவில் புறா தொல்லை உள்ள பகுதிகளுக்கு இரையை பிடிக்கும் பறவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.