• May 02 2024

கச்சேரியில் மயங்கி விழுந்த பிரபல ராப் இசை பாடகர் உயிரிழப்பு..! ரசிகர்கள் அதிர்ச்சி..!samugammedia

Sharmi / Jun 19th 2023, 9:43 am
image

Advertisement

அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் ராப் இசை பாடகரான பிக் போகி உயிரிழந்துள்ளார்.

அவர் பியூமோன்ட் நகரில் நடந்த கச்சேரி ஒன்றில் மேடையில் ராப் பாடல்களை பாடி கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.

மூச்சிரைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார்.

.உடனடியாக அவரை சுற்றியிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

துணை மருத்துவர்கள் அவருக்கு சி.பி.ஆர். சிகிச்சை அளிக்க முயன்றனர்.

ஆனால், மேடையில் அவர் மயங்கி விழுந்ததும் உயிரிழந்து உள்ளார் என மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். எனினும், போகி மரணம் அடைந்ததற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

மில்டன் போவல் என்ற இயற்பெயரை கொண்ட போகியின் மறைவால், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தீவிர ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

கடந்த 1999-ம் ஆண்டு தி ஹார்டஸ்ட் பிட் இன் தி லிட்டர் என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். அதன்பின்னர் அவர் பல்வேறு ஆல்பங்களை தனிப்பட்ட முறையிலும், கூட்டாக இணைந்தும் வெளியிட்டு உள்ளார்.

அவரது மறைவுக்கு சக ராப் பாடகர்களான பன் பி, பால் வால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னரும் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.


கச்சேரியில் மயங்கி விழுந்த பிரபல ராப் இசை பாடகர் உயிரிழப்பு. ரசிகர்கள் அதிர்ச்சி.samugammedia அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் ராப் இசை பாடகரான பிக் போகி உயிரிழந்துள்ளார்.அவர் பியூமோன்ட் நகரில் நடந்த கச்சேரி ஒன்றில் மேடையில் ராப் பாடல்களை பாடி கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.மூச்சிரைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார்.உடனடியாக அவரை சுற்றியிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துணை மருத்துவர்கள் அவருக்கு சி.பி.ஆர். சிகிச்சை அளிக்க முயன்றனர்.ஆனால், மேடையில் அவர் மயங்கி விழுந்ததும் உயிரிழந்து உள்ளார் என மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். எனினும், போகி மரணம் அடைந்ததற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை. மில்டன் போவல் என்ற இயற்பெயரை கொண்ட போகியின் மறைவால், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தீவிர ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.கடந்த 1999-ம் ஆண்டு தி ஹார்டஸ்ட் பிட் இன் தி லிட்டர் என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். அதன்பின்னர் அவர் பல்வேறு ஆல்பங்களை தனிப்பட்ட முறையிலும், கூட்டாக இணைந்தும் வெளியிட்டு உள்ளார்.அவரது மறைவுக்கு சக ராப் பாடகர்களான பன் பி, பால் வால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னரும் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement