• May 17 2024

தமிழர் பகுதியில் மீண்டும் அரங்கேறிய பசு கொலை அராஜகம்! samugammedia

Chithra / Jun 19th 2023, 9:22 am
image

Advertisement

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் நேற்று காலை (18) வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது.

இறைச்சியை களவாடிச் சென்றதன் பின், பசுவின் தலை கழிவுகள் மற்றும் வயிற்றில் இருந்த கன்று என்பன வீசப்பட்டுள்ள நிலையில் மகாவலி கண்காணிப்பு காரியாலயத்திற்கு மிக அருகில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயற்பாடுகள் மற்றும் மாடுகளை களவாடுதல் அல்லது காயப்படுத்துதல் என்பன இப்பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மகாவலி அதிகாரசபைக்கு எதிராக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பில் அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்களை மகாவளி அதிகாரசபையினர் வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நீதிமன்ற கட்டளைக்கமைய குறித்த திகதிக்கு முன்னர் வெளியேற்றுவோம் என மகாவளி அதிகாரிகள் மூலம் நீதிமன்றத்திற்கு உத்தரவாதம் வழங்கிய நிலையில் இன்னும் பூரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படவில்லை.

அத்துடன் இச்செயற்பாடுகளை வழக்குத் தொடுத்தவர்கள் அதாவது நீதிமன்ற அவமதிப்பாக இதனை எடுத்துச் செல்லவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்பிரதேசத்திற்குரிய கரடியனாறு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

இப்பிரதேசம் மகாவளி B வலயமாக பிரகடணப்படுத்தப் பட்டதன் பின்னரே இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றது.


தமிழர் பகுதியில் மீண்டும் அரங்கேறிய பசு கொலை அராஜகம் samugammedia மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் நேற்று காலை (18) வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது.இறைச்சியை களவாடிச் சென்றதன் பின், பசுவின் தலை கழிவுகள் மற்றும் வயிற்றில் இருந்த கன்று என்பன வீசப்பட்டுள்ள நிலையில் மகாவலி கண்காணிப்பு காரியாலயத்திற்கு மிக அருகில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற செயற்பாடுகள் மற்றும் மாடுகளை களவாடுதல் அல்லது காயப்படுத்துதல் என்பன இப்பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இவ்விடயம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மகாவலி அதிகாரசபைக்கு எதிராக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பில் அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்களை மகாவளி அதிகாரசபையினர் வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் நீதிமன்ற கட்டளைக்கமைய குறித்த திகதிக்கு முன்னர் வெளியேற்றுவோம் என மகாவளி அதிகாரிகள் மூலம் நீதிமன்றத்திற்கு உத்தரவாதம் வழங்கிய நிலையில் இன்னும் பூரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படவில்லை.அத்துடன் இச்செயற்பாடுகளை வழக்குத் தொடுத்தவர்கள் அதாவது நீதிமன்ற அவமதிப்பாக இதனை எடுத்துச் செல்லவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இப்பிரதேசத்திற்குரிய கரடியனாறு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கதாகும்.இப்பிரதேசம் மகாவளி B வலயமாக பிரகடணப்படுத்தப் பட்டதன் பின்னரே இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement