பதுளை – மாப்பாகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் இன்று (25) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பவரலில் 8 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பகுதிக்கு தீயணைப்பு பிரிவினரை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.