• Nov 24 2024

தனிமையில் வசித்துவந்த மூதாட்டியை சித்திரவதை செய்த திருட்டு கும்பல்...! நகை, பணம் அபகரிப்பு...! யாழில் அதிகாலைவேளை துணிகரம்...!

Sharmi / May 2nd 2024, 12:02 pm
image

யாழில் வீடொன்றில் இருந்த  வயோதிப பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்து.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணின் தங்க நகைகள், பணம் என்பன நேற்று(01) அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதன் பொது வீட்டிலிருந்த 3 பவுண் தங்க நகைகள், சுமார் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. 

வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த 3 பேரைக் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. 

மூதாட்டியின் வாயைப் பொத்தி அச்சுறுத்திய குறித்த கும்பல்,  நகை,பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதேவேளை குறித்த கொள்ளைச் சம்பவம் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.



தனிமையில் வசித்துவந்த மூதாட்டியை சித்திரவதை செய்த திருட்டு கும்பல். நகை, பணம் அபகரிப்பு. யாழில் அதிகாலைவேளை துணிகரம். யாழில் வீடொன்றில் இருந்த  வயோதிப பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணின் தங்க நகைகள், பணம் என்பன நேற்று(01) அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.இதன் பொது வீட்டிலிருந்த 3 பவுண் தங்க நகைகள், சுமார் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த 3 பேரைக் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. மூதாட்டியின் வாயைப் பொத்தி அச்சுறுத்திய குறித்த கும்பல்,  நகை,பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதேவேளை குறித்த கொள்ளைச் சம்பவம் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement