நாட்டில் உள்ள மக்கள் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையினை விட தற்போது ஓரளவு நெருக்கடியில் இருந்து மீண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.
எனவே இந்த பயணத்தில் நான் செல்லவேண்டியிருப்பது ஒரு தொங்குபாலத்தில்தான் என்பதை நான் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
அந்த தொங்குபாலத்தில் பயணிப்பதை தவிர எமக்கு வேறு பாதை எதுவுமில்லை.
எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த வழியை தவிர வேறொரு வழியுமில்லை என்பதை நான் மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.
எனவே தான் நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு மற்றும் பொதுவான உடன்பாடு அவசியமாக காணப்படுகின்றது.
அந்த இணக்கப்பாட்டிற்கு வரக்கூடியவர்கள் இந்த சபையில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமல்ல. சமயத்தலைவர்கள், தொழிற்சங்கங்கள், தொழிற்துறை தலைவர்கள், வியாபார சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்போரும் இந்த பொதுவான இணக்கப்பாட்டிற்கு பொது உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவ்வாறான இணக்கப்பாட்டில் பயணித்தால் மாத்திரமே உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக நாம் துரிதமாக தலைநிமிர்ந்து வாழ முடியும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேவேளை நாங்கள் புதியதொரு கருத்து ஒருமைப்பாட்டிற்கு வரவேண்டியது அவசியம்.
எங்களுடைய எதிர்காலம் ஒருகாலம் மதிப்பீடு செய்யப்படும். அதில் நாங்கள் இந்த நாட்டிற்கு துரோகிகளாக இருந்துள்ளோம் என்று முத்திரை குத்தப்பட்டவர்களாக இருப்பதா அல்லது நாட்டை நேசித்தவர்கள் என்பதில் உள்ளடங்குவதா என்பதை சற்று சிந்தித்து பார்க்குமாறும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்கு அனைத்து தரப்பினரின் பொதுவான இணக்கப்பாடு அவசியம். ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு. நாட்டில் உள்ள மக்கள் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையினை விட தற்போது ஓரளவு நெருக்கடியில் இருந்து மீண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.எனவே இந்த பயணத்தில் நான் செல்லவேண்டியிருப்பது ஒரு தொங்குபாலத்தில்தான் என்பதை நான் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.அந்த தொங்குபாலத்தில் பயணிப்பதை தவிர எமக்கு வேறு பாதை எதுவுமில்லை.எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த வழியை தவிர வேறொரு வழியுமில்லை என்பதை நான் மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.எனவே தான் நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு மற்றும் பொதுவான உடன்பாடு அவசியமாக காணப்படுகின்றது.அந்த இணக்கப்பாட்டிற்கு வரக்கூடியவர்கள் இந்த சபையில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமல்ல. சமயத்தலைவர்கள், தொழிற்சங்கங்கள், தொழிற்துறை தலைவர்கள், வியாபார சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்போரும் இந்த பொதுவான இணக்கப்பாட்டிற்கு பொது உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.அவ்வாறான இணக்கப்பாட்டில் பயணித்தால் மாத்திரமே உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக நாம் துரிதமாக தலைநிமிர்ந்து வாழ முடியும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.அதேவேளை நாங்கள் புதியதொரு கருத்து ஒருமைப்பாட்டிற்கு வரவேண்டியது அவசியம்.எங்களுடைய எதிர்காலம் ஒருகாலம் மதிப்பீடு செய்யப்படும். அதில் நாங்கள் இந்த நாட்டிற்கு துரோகிகளாக இருந்துள்ளோம் என்று முத்திரை குத்தப்பட்டவர்களாக இருப்பதா அல்லது நாட்டை நேசித்தவர்கள் என்பதில் உள்ளடங்குவதா என்பதை சற்று சிந்தித்து பார்க்குமாறும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.