• May 18 2024

இலங்கையில் தென்னிந்திய கலைஞர்களை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி..! அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை samugammedia

Chithra / Nov 24th 2023, 1:20 pm
image

Advertisement

  

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய தென்னிந்திய கலைஞர்களை வைத்து பாரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை, கனடா, மலேசியா ஆகிய மூன்று நாடுகளை இலக்காக கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேவா, ஹரிஹரன், முரளி, கிருஷ்ணராஜ், ஸ்ரீகாந்த், அனுராதா, அஜய்கிருஷ்ணா, பூஜா, அல்கா, அஜித், மனோ, சத்யபிரகாஷ், திவாகர் என பல பிரபல கலைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

உள்ளூர் ரசிகர்கள் மட்டுமின்றி 2000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இலங்கையில் தென்னிந்திய கலைஞர்களை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி. அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை samugammedia   இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கமைய தென்னிந்திய கலைஞர்களை வைத்து பாரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.இலங்கை, கனடா, மலேசியா ஆகிய மூன்று நாடுகளை இலக்காக கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.தேவா, ஹரிஹரன், முரளி, கிருஷ்ணராஜ், ஸ்ரீகாந்த், அனுராதா, அஜய்கிருஷ்ணா, பூஜா, அல்கா, அஜித், மனோ, சத்யபிரகாஷ், திவாகர் என பல பிரபல கலைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.உள்ளூர் ரசிகர்கள் மட்டுமின்றி 2000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.இதேவேளை, 2023ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement