• May 03 2024

மதங்களை அவமதிக்கும் வகையில் குழு ஒன்று உருவாகியுள்ளது - சஜித் பிரேமதாச

Tharun / Apr 19th 2024, 9:30 pm
image

Advertisement

பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாட்டின் குடிமக்களையும், அவர்களின் மதத்தைப் பின்பற்றும் உரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவினர் தற்போது நாட்டில் உருவாகி வருகின்றனர். போதி மரம் பயனற்ற மரம் என ஒரு குறிப்பிட்ட குழுவினர் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு புத்தசாசனம், பௌத்த மதம், மகா சங்கரத்தினர் மற்றும் கௌத்தம புத்தரை அவமதிக்கும் குழுவொன்று நாட்டில் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர்களைப் பொறுத்தவரை, விகாரைகளுக்கு உதவிகள் செய்வதும், சிலைகளை வழிபடுவதும் ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி வருகின்றனர், இது தவறா என்று மக்களிடம் கேள்வி எழுப்புகிறேன், அவர்களின் கருத்துப்படி, இன்றும் தான் ஒரு பெரிய தவறையே செய்து வருகிறேன், இந்நாட்டில் மத சுதந்திரம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறி நாட்டில் மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்க எந்த உரிமையும் இல்லை. மத சுதந்திரம் அடிப்படை உரிமையாகும். 220 இலட்சம் மக்களுக்கும் தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

மதத்தை தடை செய்து, மத உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சக்திகளுக்கு நாட்டில் இடமில்லை. புத்தருக்கு புத்தர் நிலையை வழங்கிய போதிமரம் வெறும் போதிமரம் என்று சொல்பவர்களுக்கு, மதச்சார்பற்றவர்கள் என கூறிக் கொண்டு, பௌத்தத்தை இழிவுபடுத்த எந்த உரிமையும் இல்லை. அவர்களின் மதச்சார்பற்ற கொள்கைகள் ஏனைய குடிமக்களை பாதிக்காத வகையில் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மதங்களை அவமதிக்கும் வகையில் குழு ஒன்று உருவாகியுள்ளது - சஜித் பிரேமதாச பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாட்டின் குடிமக்களையும், அவர்களின் மதத்தைப் பின்பற்றும் உரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவினர் தற்போது நாட்டில் உருவாகி வருகின்றனர். போதி மரம் பயனற்ற மரம் என ஒரு குறிப்பிட்ட குழுவினர் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு புத்தசாசனம், பௌத்த மதம், மகா சங்கரத்தினர் மற்றும் கௌத்தம புத்தரை அவமதிக்கும் குழுவொன்று நாட்டில் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.அவர்களைப் பொறுத்தவரை, விகாரைகளுக்கு உதவிகள் செய்வதும், சிலைகளை வழிபடுவதும் ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி வருகின்றனர், இது தவறா என்று மக்களிடம் கேள்வி எழுப்புகிறேன், அவர்களின் கருத்துப்படி, இன்றும் தான் ஒரு பெரிய தவறையே செய்து வருகிறேன், இந்நாட்டில் மத சுதந்திரம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்த பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறி நாட்டில் மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்க எந்த உரிமையும் இல்லை. மத சுதந்திரம் அடிப்படை உரிமையாகும். 220 இலட்சம் மக்களுக்கும் தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.மதத்தை தடை செய்து, மத உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சக்திகளுக்கு நாட்டில் இடமில்லை. புத்தருக்கு புத்தர் நிலையை வழங்கிய போதிமரம் வெறும் போதிமரம் என்று சொல்பவர்களுக்கு, மதச்சார்பற்றவர்கள் என கூறிக் கொண்டு, பௌத்தத்தை இழிவுபடுத்த எந்த உரிமையும் இல்லை. அவர்களின் மதச்சார்பற்ற கொள்கைகள் ஏனைய குடிமக்களை பாதிக்காத வகையில் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement