இந்திய மத்திய அரசின் அழைப்பையேற்று புதுடில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இன்று(05) காலை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பில், இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இந்தியா செயல்பட்டு வருகிறது.
அண்டை நாட்டாருக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதாகவும் , இருதரப்பு உறவுகள் மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும்
அதேவேளை இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு படையெடுத்த அனுர தலைமையிலான குழுவினர். ஜெய்சங்கருடன் முக்கிய சந்திப்பு.samugammedia இந்திய மத்திய அரசின் அழைப்பையேற்று புதுடில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இன்று(05) காலை சந்தித்து கலந்துரையாடினர்.குறித்த சந்திப்பில், இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இந்தியா செயல்பட்டு வருகிறது.அண்டை நாட்டாருக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதாகவும் , இருதரப்பு உறவுகள் மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அதேவேளை இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.