• Jul 17 2025

வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித கால்; விசாரணையில் அதிர்ச்சி!

Chithra / Jul 17th 2025, 8:41 am
image


அம்பாந்தோட்டையில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு மனித கால்  மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித கால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையின் காலாக இருக்கலாம்  என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர் தினமும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தையின் குடும்பத்தினர் வலஸ்முல்ல பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வீட்டின் பின்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புதைக்கப்பட்டிருந்த மனித கால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதைக்கப்பட்டுள்ள சடலத்தின் மீதி பாகங்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித கால்; விசாரணையில் அதிர்ச்சி அம்பாந்தோட்டையில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு மனித கால்  மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மனித கால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையின் காலாக இருக்கலாம்  என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.ஐந்து பிள்ளைகளின் தந்தையை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இவர் தினமும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.தந்தையின் குடும்பத்தினர் வலஸ்முல்ல பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வீட்டின் பின்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புதைக்கப்பட்டிருந்த மனித கால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.புதைக்கப்பட்டுள்ள சடலத்தின் மீதி பாகங்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement