• May 02 2024

நெடுந்தீவை அழிக்க மதுபான விற்பனை நிலையமா ?

Tamil nila / Apr 15th 2024, 6:41 pm
image

Advertisement

நெடுந்தீவு மண்ணின் வரலாற்றில்  மதுபான விற்பனை நிலையம் காணப்பட்டதில்லை . அங்கு பரவலாக  பனங்கள்ளு  விற்பனையே காணப்படுகின்றது . பனங்கள்ளு பாவனை காரணமாக  அங்கு பெரிதாக வன்முறையேதும் இது வரைகாலமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை . ஆனாலும் அவ்வரலாற்று  மான்மியத்தை சீர்குலைப்பதற்காகவும் குடும்பங்களிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்காகவும்  முதன்முறையாக  மதுபான விற்பனைக்கான அனுமதி நெடுந்தீவில் வழங்கப்பட்டிருப்பதாக  தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் கண்டனம் தெரிவித்துள்ளார் . 

ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் ஆதரவிலேயே இவ் மதுபான விற்பனை அனுமதி  நெடுந்தீவிலுள்ள தனியார் விடுதியொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது . 

இதுவரைகாலமும்  புங்குடுதீவிலுள்ள மதுபான விற்பனை நிலையத்திலிருந்து  அண்ணளவான சில மதுபான போத்தல்களையே மது  பாவனையாளர்கள் கொள்வனவு செய்து  நெடுந்தீவுக்கு எடுத்துச்செல்லும் வழமை காணப்பட்டிருந்தது .  

ஆனால் தற்போது  தனியார் விடுதிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற  மதுபான விற்பனை அனுமதியூடாக  நெடுந்தீவில் மதுபாவனை எண்ணற்று அதிகரிக்கவுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர் . 

அதேதருணத்தில் நெடுந்தீவின் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக காணப்படுகின்ற கற்பகதருவின் பனங்கள்ளு விற்பனையும் இதன்காரணமாக பாரியளவில் சரிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது . 

இன்றையதினம் நெடுந்தீவு யுவானியர் தேவாலயத்தில்  கத்தோலிக்க பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற  நெடுந்தீவு மதுபான விற்பனை அனுமதிக்கெதிரான  கலந்துரையாடலில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான பொதுமக்கள்  கலந்துகொண்டு தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதையும் எதிர்வரும் 22 ஆம் திகதி  மதுபான விற்பனைக்கெதிரான  பாரிய எதிர்ப்பு போராட்டமொன்று நெடுந்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதனையும்  அறியத்தருகின்றேன்  என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .



நெடுந்தீவை அழிக்க மதுபான விற்பனை நிலையமா நெடுந்தீவு மண்ணின் வரலாற்றில்  மதுபான விற்பனை நிலையம் காணப்பட்டதில்லை . அங்கு பரவலாக  பனங்கள்ளு  விற்பனையே காணப்படுகின்றது . பனங்கள்ளு பாவனை காரணமாக  அங்கு பெரிதாக வன்முறையேதும் இது வரைகாலமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை . ஆனாலும் அவ்வரலாற்று  மான்மியத்தை சீர்குலைப்பதற்காகவும் குடும்பங்களிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்காகவும்  முதன்முறையாக  மதுபான விற்பனைக்கான அனுமதி நெடுந்தீவில் வழங்கப்பட்டிருப்பதாக  தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் கண்டனம் தெரிவித்துள்ளார் . ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் ஆதரவிலேயே இவ் மதுபான விற்பனை அனுமதி  நெடுந்தீவிலுள்ள தனியார் விடுதியொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது . இதுவரைகாலமும்  புங்குடுதீவிலுள்ள மதுபான விற்பனை நிலையத்திலிருந்து  அண்ணளவான சில மதுபான போத்தல்களையே மது  பாவனையாளர்கள் கொள்வனவு செய்து  நெடுந்தீவுக்கு எடுத்துச்செல்லும் வழமை காணப்பட்டிருந்தது .  ஆனால் தற்போது  தனியார் விடுதிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற  மதுபான விற்பனை அனுமதியூடாக  நெடுந்தீவில் மதுபாவனை எண்ணற்று அதிகரிக்கவுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர் . அதேதருணத்தில் நெடுந்தீவின் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக காணப்படுகின்ற கற்பகதருவின் பனங்கள்ளு விற்பனையும் இதன்காரணமாக பாரியளவில் சரிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது . இன்றையதினம் நெடுந்தீவு யுவானியர் தேவாலயத்தில்  கத்தோலிக்க பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற  நெடுந்தீவு மதுபான விற்பனை அனுமதிக்கெதிரான  கலந்துரையாடலில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான பொதுமக்கள்  கலந்துகொண்டு தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதையும் எதிர்வரும் 22 ஆம் திகதி  மதுபான விற்பனைக்கெதிரான  பாரிய எதிர்ப்பு போராட்டமொன்று நெடுந்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதனையும்  அறியத்தருகின்றேன்  என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement