• May 22 2024

வங்காள விரிகுடாவில் உருவாகியது “Mocha” என்ற பாரிய சூறாவளி! மக்களுக்கு எச்சரிக்கை samugammedia

Chithra / May 13th 2023, 11:46 am
image

Advertisement


மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த Mocha என்ற பாரிய சூறாவளியானது நேற்று, வட அகலாங்கு 15.10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.

அது வடக்கு – வடகிழக்கு திசையில் மேலும் வலுவடைந்து கொண்டு நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியானது மே 14ஆம் திகதி நண்பகலளவில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மார் கரைகளை கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட அகலாங்குகள் 05N இற்கும்20N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள்82E இற்கும்100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசந்துறை மற்றும்முல்லைத்தீவு ஊடாகதிருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் நடவடிக்கைகளில்ஈடுபடுவது ஆபத்தானதாகும்.

எனவே, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இதேவேளை, மேல்,சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வங்காள விரிகுடாவில் உருவாகியது “Mocha” என்ற பாரிய சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை samugammedia மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த Mocha என்ற பாரிய சூறாவளியானது நேற்று, வட அகலாங்கு 15.10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.அது வடக்கு – வடகிழக்கு திசையில் மேலும் வலுவடைந்து கொண்டு நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இத் தொகுதியானது மே 14ஆம் திகதி நண்பகலளவில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மார் கரைகளை கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வட அகலாங்குகள் 05N இற்கும்20N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள்82E இற்கும்100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசந்துறை மற்றும்முல்லைத்தீவு ஊடாகதிருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் நடவடிக்கைகளில்ஈடுபடுவது ஆபத்தானதாகும்.எனவே, மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.இதேவேளை, மேல்,சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement