• Apr 30 2024

அரசியல்வாதிகளின் வீடுகள் எரிப்பு...! 414 கோப்புகளுடன் களத்தில் பொலிஸார் - விடுக்கப்பட்ட பணிப்புரை.! samugammedia

Sharmi / May 13th 2023, 11:42 am
image

Advertisement

கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது, அரசியல்வாதிகளின் வீடுகளை சில தரப்பினரால் எரித்து அழித்தமை தொடர்பான 414 கோப்புகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் வீடுகள் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் வினவியபோதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனவே இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நீதியமைச்சர் என்ற வகையில் பொலிஸாரிலோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்திலோ எவ்வித செல்வாக்கும் செலுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொலிஸாருக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அரசியல்வாதிகளின் வீடுகள் எரிப்பு. 414 கோப்புகளுடன் களத்தில் பொலிஸார் - விடுக்கப்பட்ட பணிப்புரை. samugammedia கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது, அரசியல்வாதிகளின் வீடுகளை சில தரப்பினரால் எரித்து அழித்தமை தொடர்பான 414 கோப்புகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசியல்வாதிகளின் வீடுகள் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் வினவியபோதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எனவே இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நீதியமைச்சர் என்ற வகையில் பொலிஸாரிலோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்திலோ எவ்வித செல்வாக்கும் செலுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, பொலிஸாருக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement