• May 17 2024

20 வெற்றிடங்களில் ஆளில்லை.. ! சுகாதார அமைச்சின் அசமந்த போக்கால் நோயின் தாக்கம் அதிகரிப்பு! samugammedia

Chithra / May 13th 2023, 11:59 am
image

Advertisement

பயிற்சி பாடசாலையின் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 13 சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்களுக்கு 5 மாதங்கள் கடந்த போதும் இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை என சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் அதிகளவில் பரவி வருகின்ற நிலையிலும் இந்த அதிகாரிகள் அரச சேவையில் ஈடுபடுத்தப்படாமை பாரிய இழப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் பயிற்சியை நிறைவு செய்த இந்த உத்தியோகத்தர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு தமது சங்கம் பல தடவைகள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் திசானக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரச சேவையில் நூற்று எழுபத்தாறு பூச்சியியல் உத்தியோகத்தர்களே உள்ளதாகவும் மேலும் இருபது அதிகாரிகளுக்கான வெற்றிடம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களில் நூற்றி இருபது உத்தியோகத்தர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார வைத்திய அதிகாரியின் இரண்டு அலுவலகங்களில் சில அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

அதற்கான கொடுப்பனவு அல்லது எரிபொருள் செலவு எதுவும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் திசானக திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

சில மாகாண சபைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகளின் கடமைகளை உள்ளடக்கிய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

20 வெற்றிடங்களில் ஆளில்லை. சுகாதார அமைச்சின் அசமந்த போக்கால் நோயின் தாக்கம் அதிகரிப்பு samugammedia பயிற்சி பாடசாலையின் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 13 சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்களுக்கு 5 மாதங்கள் கடந்த போதும் இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை என சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.டெங்கு நோயின் தாக்கம் அதிகளவில் பரவி வருகின்ற நிலையிலும் இந்த அதிகாரிகள் அரச சேவையில் ஈடுபடுத்தப்படாமை பாரிய இழப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வருடம் டிசெம்பர் மாதம் பயிற்சியை நிறைவு செய்த இந்த உத்தியோகத்தர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு தமது சங்கம் பல தடவைகள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும் திசானக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.தற்போது அரச சேவையில் நூற்று எழுபத்தாறு பூச்சியியல் உத்தியோகத்தர்களே உள்ளதாகவும் மேலும் இருபது அதிகாரிகளுக்கான வெற்றிடம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அவர்களில் நூற்றி இருபது உத்தியோகத்தர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.சுகாதார வைத்திய அதிகாரியின் இரண்டு அலுவலகங்களில் சில அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.அதற்கான கொடுப்பனவு அல்லது எரிபொருள் செலவு எதுவும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் திசானக திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.சில மாகாண சபைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.ஒன்றுக்கு மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகளின் கடமைகளை உள்ளடக்கிய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement