• Nov 24 2024

சீனா நடைமுறைப்படுத்தியுள்ள புதிய சட்டம் - எதிர்ப்பை வெளியிட்டுள்ள நாடு

Tharun / Jun 16th 2024, 7:32 pm
image

தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வரும் நிலையில், அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்து வருகின்றது.

இதற்கு பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, தாய்வான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக கூறி சீனா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையிலே, தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, சீனக் கடலோரக் காவல்படையினர் எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் நிர்வாகத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் வெளி நாட்டவர்களைத் தடுத்து வைக்க முடியும். 60 நாட்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும் சீனாவின் பிராந்திய கடல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டுக் கப்பல்கள் தடுத்து வைக்கப்படலாம்.

இந்த சட்டத்திற்கு பிலிப்பைன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சீன கடலோர காவல் படையின் நடவடிக்கைகள் காட்டு மிராண்டித்தனமானது, மற்றும் மனிதாபிமானமற்றது என பிலிப்பைன்ஸ் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா நடைமுறைப்படுத்தியுள்ள புதிய சட்டம் - எதிர்ப்பை வெளியிட்டுள்ள நாடு தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வரும் நிலையில், அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்து வருகின்றது.இதற்கு பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, தாய்வான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக கூறி சீனா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையிலே, தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, சீனக் கடலோரக் காவல்படையினர் எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் நிர்வாகத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் வெளி நாட்டவர்களைத் தடுத்து வைக்க முடியும். 60 நாட்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கப்படுகிறது.மேலும் சீனாவின் பிராந்திய கடல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டுக் கப்பல்கள் தடுத்து வைக்கப்படலாம்.இந்த சட்டத்திற்கு பிலிப்பைன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சீன கடலோர காவல் படையின் நடவடிக்கைகள் காட்டு மிராண்டித்தனமானது, மற்றும் மனிதாபிமானமற்றது என பிலிப்பைன்ஸ் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement