• Apr 27 2024

நியூஸிலாந்து பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம்!

Sharmi / Dec 13th 2022, 8:20 pm
image

Advertisement

நியூஸிலாந்தின் எதிர்கால தலைமுறையினர் புகையிலை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கான சட்டம் நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் இன்றைய தினம்  (13) நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

புதிய புகைபிடித்தலுக்கு எதிரான சட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக, 2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விற்பனை செய்வோருக்கு 150 ஆயிரம் நியூஸிலாந்து டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  சட்டம் புகைக்கும் புகையிலை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிகோட்டின் அளவையும் குறைக்கும் என்பதுடன், புகையிலை விற்கக்கூடிய சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 90% ஆல் குறைக்கும் என்று சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.



நியூஸிலாந்து பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம் நியூஸிலாந்தின் எதிர்கால தலைமுறையினர் புகையிலை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கான சட்டம் நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் இன்றைய தினம்  (13) நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.புதிய புகைபிடித்தலுக்கு எதிரான சட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக, 2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு விற்பனை செய்வோருக்கு 150 ஆயிரம் நியூஸிலாந்து டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த  சட்டம் புகைக்கும் புகையிலை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிகோட்டின் அளவையும் குறைக்கும் என்பதுடன், புகையிலை விற்கக்கூடிய சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 90% ஆல் குறைக்கும் என்று சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement