• Apr 27 2024

தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்...! விசேட குழுவை அமைத்த மைத்திரி....!samugammedia

Sharmi / Oct 30th 2023, 3:42 pm
image

Advertisement

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக தயாராகி வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலை முகங்கொடுக்க தயாராகின்றது.

அந்தவகையில் தமது கட்சிகளின் மறுசீரமைப்பு தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதுள்ளதாக சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய மட்டத்திலான தேர்தல்களில் சுதந்திரக் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும். அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை இக்குழு தீர்மானிக்கும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். அதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இக்குழு கூடவுள்ளது. அதேவேளை எதிர்வரும் தேர்தலுக்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம். விசேட குழுவை அமைத்த மைத்திரி.samugammedia அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக தயாராகி வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலை முகங்கொடுக்க தயாராகின்றது.அந்தவகையில் தமது கட்சிகளின் மறுசீரமைப்பு தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதுள்ளதாக சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.தேசிய மட்டத்திலான தேர்தல்களில் சுதந்திரக் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும். அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை இக்குழு தீர்மானிக்கும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். அதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இக்குழு கூடவுள்ளது. அதேவேளை எதிர்வரும் தேர்தலுக்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement