• May 25 2025

யாழில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் கைது..!

Sharmi / May 24th 2025, 4:52 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைதான சம்பவம் பதிவாகியுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அனுமதி இன்றி ஒரு தொகை மாட்டு இறைச்சியை முச்சக்கர வண்டியில் மருதங்கேணி புதுக்காட்டு வீதியூடாக செம்பியன் பற்று பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த வேலையில் மருதங்கேணி பொலிஸாரால் மருதங்கேணி பொதுச் சந்தை முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் 

குறித்த சந்தேக நபர் நாகர் கோவியிலை சேர்ந்தவர் எனவும் நாளைய தினம் செம்பியன் பற்று  ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆலய திருவிழாவில் வியாபார நோக்கில் இறைச்சியை கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் மருதங்கேணி பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



யாழில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் கைது. யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைதான சம்பவம் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அனுமதி இன்றி ஒரு தொகை மாட்டு இறைச்சியை முச்சக்கர வண்டியில் மருதங்கேணி புதுக்காட்டு வீதியூடாக செம்பியன் பற்று பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த வேலையில் மருதங்கேணி பொலிஸாரால் மருதங்கேணி பொதுச் சந்தை முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த சந்தேக நபர் நாகர் கோவியிலை சேர்ந்தவர் எனவும் நாளைய தினம் செம்பியன் பற்று  ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆலய திருவிழாவில் வியாபார நோக்கில் இறைச்சியை கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் மருதங்கேணி பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement