• May 03 2024

நியூசிலாந்தின் தெற்குத்தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு ! samugammedia

Tamil nila / Sep 20th 2023, 8:57 am
image

Advertisement

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்சி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு நேரப்படி காலை 9.14 அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் Christchurch நகரில் இருந்து 124 கிலோ மீற்றர் மேற்கே 11 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசாங்க இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சுமார் 15,000 பேர் இந்த நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பசுபிக் நெருப்பு வளையத்தில் மைந்துள்ளதன் காரணமாக நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இதன்படி, நியூசிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தனர்.


நியூசிலாந்தின் தெற்குத்தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு samugammedia நியூசிலாந்தின் தெற்குத் தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்சி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டு நேரப்படி காலை 9.14 அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் Christchurch நகரில் இருந்து 124 கிலோ மீற்றர் மேற்கே 11 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசாங்க இணையத்தளம் தெரிவித்துள்ளது.இதன்படி, சுமார் 15,000 பேர் இந்த நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும், பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பசுபிக் நெருப்பு வளையத்தில் மைந்துள்ளதன் காரணமாக நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.இதன்படி, நியூசிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement