• Apr 25 2024

மார்ச் முதலாம் திகதி வானத்தில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 6:50 am
image

Advertisement

மார்ச் 1 அன்று சூரிய அஸ்தமனம் ஆன ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேற்கு வானத்தில் சந்திரன், வெள்ளி, வியாழன் ஆகிய மூன்றும் முக்கோண வடிவில் வானில் தென்படும்.

நமது சூரிய மண்டலத்தில் உள்ள இரண்டு பிரகாசமான கிரகங்களான வியாழன் மற்றும் வெள்ளி ஆகும். இந்த இரண்டும் சில நாட்களாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில், இரண்டு கிரகங்களும் 29 டிகிரியால் பிரிக்கப்பட்டன, இப்போது அவை மெதுவாக நெருங்கி வருகின்றன.


இவைகளோடு சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் மார்ச் 1 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வளிமண்டலத்தில் சந்திக்கும் என்பதால் இரவு வானில் ஒரு அரிய நிகழ்வைக் காணலாம்.


நாசாவின் கூற்றுப்படி, ஒரு இணைப்பு என்பது இரண்டு கிரகங்கள், ஒரு கிரகம் மற்றும் சந்திரன், அல்லது ஒரு கிரகம் மற்றும் நட்சத்திரம் ஆகியவை பூமியின் இரவு வானில் நெருக்கமாகத் தோன்றும் நிகழ்வு தான். இது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு இடையில் அடிக்கடி நிகழ்கின்றன, ஏனெனில் அவை சூரியனைச் சுற்றி வருகின்றன.

மார்ச் முதலாம் திகதி வானத்தில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு SamugamMedia மார்ச் 1 அன்று சூரிய அஸ்தமனம் ஆன ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேற்கு வானத்தில் சந்திரன், வெள்ளி, வியாழன் ஆகிய மூன்றும் முக்கோண வடிவில் வானில் தென்படும்.நமது சூரிய மண்டலத்தில் உள்ள இரண்டு பிரகாசமான கிரகங்களான வியாழன் மற்றும் வெள்ளி ஆகும். இந்த இரண்டும் சில நாட்களாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில், இரண்டு கிரகங்களும் 29 டிகிரியால் பிரிக்கப்பட்டன, இப்போது அவை மெதுவாக நெருங்கி வருகின்றன.இவைகளோடு சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் மார்ச் 1 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வளிமண்டலத்தில் சந்திக்கும் என்பதால் இரவு வானில் ஒரு அரிய நிகழ்வைக் காணலாம்.நாசாவின் கூற்றுப்படி, ஒரு இணைப்பு என்பது இரண்டு கிரகங்கள், ஒரு கிரகம் மற்றும் சந்திரன், அல்லது ஒரு கிரகம் மற்றும் நட்சத்திரம் ஆகியவை பூமியின் இரவு வானில் நெருக்கமாகத் தோன்றும் நிகழ்வு தான். இது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு இடையில் அடிக்கடி நிகழ்கின்றன, ஏனெனில் அவை சூரியனைச் சுற்றி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement