• May 18 2024

இன்று காதலர்களுக்கு எட்டாத சிவப்பு ரோஜா! SamugamMedia

Chithra / Feb 14th 2023, 10:23 am
image

Advertisement

இன்றைய காதலர் தினத்தில் சிவப்பு ரோஜாவுக்கு தனி இடம் கிடைத்தாலும், சந்தையில் சிவப்பு ரோஜாவின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



அதன்படி இந்த காதலர் தினத்தை முன்னிட்டு சாதாரண அளவிலான இயற்கை சிவப்பு ரோஜா 1200 ரூபாவிற்கும், செயற்கை சிவப்பு ரோஜா 500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.


கடந்த ஆண்டு கொவிட் தொற்றுநோய் காரணமாக இந்த விலைகள் ஓரளவு அதிகரிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு விலை அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்காக வெளி நாடுகளில் இருந்து வர்த்தகர்கள் சிவப்பு ரோஜா மற்றும் அலங்காரப் பொருட்களை இறக்குமதி செய்வதாகவும், இந்த ஆண்டு புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களுக்கு பதிலாக கடந்த ஆண்டு மிச்சமிருந்த அலங்காரப் பொருட்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காதலர்களுக்கு எட்டாத சிவப்பு ரோஜா SamugamMedia இன்றைய காதலர் தினத்தில் சிவப்பு ரோஜாவுக்கு தனி இடம் கிடைத்தாலும், சந்தையில் சிவப்பு ரோஜாவின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அதன்படி இந்த காதலர் தினத்தை முன்னிட்டு சாதாரண அளவிலான இயற்கை சிவப்பு ரோஜா 1200 ரூபாவிற்கும், செயற்கை சிவப்பு ரோஜா 500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.கடந்த ஆண்டு கொவிட் தொற்றுநோய் காரணமாக இந்த விலைகள் ஓரளவு அதிகரிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு விலை அதிகரித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்காக வெளி நாடுகளில் இருந்து வர்த்தகர்கள் சிவப்பு ரோஜா மற்றும் அலங்காரப் பொருட்களை இறக்குமதி செய்வதாகவும், இந்த ஆண்டு புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களுக்கு பதிலாக கடந்த ஆண்டு மிச்சமிருந்த அலங்காரப் பொருட்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement