• May 02 2024

தமிழர் தாயகத்தில் தொடரும் இனவழிப்புக்கு எதிராக பிரித்தானியாவில் சிறப்பு மாநாடு..! samugammedia

Chithra / Jun 15th 2023, 11:54 am
image

Advertisement

இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் சிறப்பு மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மாநாடு பிரித்தானியாவில் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.

இந்த மாநாட்டில் தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு எனும் கருப்பொருளில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தொடர்பிலான வழக்கறிஞர் பற்றிக் லூயிஸ் தலைமையில் பிரித்தானிய பாராளுமன்றின் சிறப்பு மண்டபத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் தாயகத்து அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரித்தானிய அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் தாயகத்திலிருந்து வருகை தந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் ஆகியோர் இலங்கையில் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பு தொடர்பிலும் அவற்றிற்கு சர்வதேச தீர்வை எவ்வாறு அணுகுவது தொடர்பிலும் சிறப்புரைகள் ஆற்றினர்.

இந்நிலையில் பிரித்தானியா தமிழ் இளையோர் சார்பாக செல்வி.கிசானியின் வரவேற்புரை மற்றும் செல்வன்.சர்வீனின் இனவழிப்பு சிறப்பு உரைகளைத் தொடர்ந்து, மாநாட்டுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆகிய Mr John McDonald's MP, Mr Virendra Sharma MP, Lib Democratic Leader Sir Ed Davey MP, Ms Sarah Jones - MP and Shadow Minister of State for Police and the Fire Service, Mr Sam Tarry MP, Mr Gareth Thomas MP - Shadow Minister for International Trade

ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கிய சமவேளை இனவழிப்புக்கான தீர்மானத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


தமிழர் தாயகத்தில் தொடரும் இனவழிப்புக்கு எதிராக பிரித்தானியாவில் சிறப்பு மாநாடு. samugammedia இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் சிறப்பு மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த மாநாடு பிரித்தானியாவில் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.இந்த மாநாட்டில் தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு எனும் கருப்பொருளில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தொடர்பிலான வழக்கறிஞர் பற்றிக் லூயிஸ் தலைமையில் பிரித்தானிய பாராளுமன்றின் சிறப்பு மண்டபத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் தாயகத்து அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரித்தானிய அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இதில் தாயகத்திலிருந்து வருகை தந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் ஆகியோர் இலங்கையில் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பு தொடர்பிலும் அவற்றிற்கு சர்வதேச தீர்வை எவ்வாறு அணுகுவது தொடர்பிலும் சிறப்புரைகள் ஆற்றினர்.இந்நிலையில் பிரித்தானியா தமிழ் இளையோர் சார்பாக செல்வி.கிசானியின் வரவேற்புரை மற்றும் செல்வன்.சர்வீனின் இனவழிப்பு சிறப்பு உரைகளைத் தொடர்ந்து, மாநாட்டுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆகிய Mr John McDonald's MP, Mr Virendra Sharma MP, Lib Democratic Leader Sir Ed Davey MP, Ms Sarah Jones - MP and Shadow Minister of State for Police and the Fire Service, Mr Sam Tarry MP, Mr Gareth Thomas MP - Shadow Minister for International Tradeஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கிய சமவேளை இனவழிப்புக்கான தீர்மானத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement