• May 17 2024

இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை..! 67 பிரிவுகள் அபாய வலயங்களாக அறிவிப்பு..! samugammedia

Chithra / Jun 22nd 2023, 3:44 pm
image

Advertisement

67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


இதனிடையே, கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, கொத்தட்டுவை, மஹரகம ஆகிய டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை. 67 பிரிவுகள் அபாய வலயங்களாக அறிவிப்பு. samugammedia 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதனிடையே, கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லை, கொத்தட்டுவை, மஹரகம ஆகிய டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement