• Nov 19 2024

பாக்கு நீரிணையை கடக்க தயாராகும் மாணவன்...!

Sharmi / Feb 28th 2024, 5:27 pm
image

கடற்பரப்பினை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக நீச்சலில் பாக்கு நீரிணையை கடக்கவுள்ளதாக  ஹரிகரன் தன்வந்த் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில் தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று(28) காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து அதிகாலை 12.05 மணிக்கு நீச்சலை ஆரம்பித்து, மதியம் தலைமன்னார் பியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், நீச்சலில் பாக்கு நீரிணையை கடந்து, இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் முயற்சி காணப்படுகிறது.

கடற்பரப்பில் வெற்று பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அகற்றி, கடற்பரப்பினை சுத்தமாக வைத்திருத்தல், விழிப்புணர்வினை ஏற்படுத்தல், ஆமை முதலான கடல்வாழ் உயிரினங்களை  பாதுகாத்தல், முருகைக் கற் பாறைகளின் முக்கியத்துவத்தை பேணுதல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சலில்  ஈடுபடவுள்ளதாகவும் தன்வந்த் தெரிவித்தார்.


பாக்கு நீரிணையை கடக்க தயாராகும் மாணவன். கடற்பரப்பினை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக நீச்சலில் பாக்கு நீரிணையை கடக்கவுள்ளதாக  ஹரிகரன் தன்வந்த் தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில் தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று(28) காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.மார்ச் மாதம் முதலாம் திகதி இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து அதிகாலை 12.05 மணிக்கு நீச்சலை ஆரம்பித்து, மதியம் தலைமன்னார் பியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், நீச்சலில் பாக்கு நீரிணையை கடந்து, இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் முயற்சி காணப்படுகிறது.கடற்பரப்பில் வெற்று பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அகற்றி, கடற்பரப்பினை சுத்தமாக வைத்திருத்தல், விழிப்புணர்வினை ஏற்படுத்தல், ஆமை முதலான கடல்வாழ் உயிரினங்களை  பாதுகாத்தல், முருகைக் கற் பாறைகளின் முக்கியத்துவத்தை பேணுதல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சலில்  ஈடுபடவுள்ளதாகவும் தன்வந்த் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement