• Oct 30 2024

ஆசிரியரால் உயிரை மாய்க்க முயன்ற மாணவி..! வவுனியாவில் பரபரப்பு சம்பவம்

Chithra / Dec 8th 2023, 5:43 pm
image

Advertisement

 

பாடசாலை மாணவியொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி தனது உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி அண்மையில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டிருந்தார். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த மாணவி உயிரை மாய்க்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து குறித்த ஆசிரியருக்கு வலயக்கல்வி அலுவலகத்தினால் இடமாற்றம் அளிக்கப்பட்டது. 

அத்துடன் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்கும் வண்ணம் குழு ஒன்றையும் நியமித்திருந்தது. 

இதேவேளை வலயக்கல்வி அலுவலகத்தால் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், 

நேற்றையதினம் குறித்த மாணவி தனது வீட்டில் உயிரை மாய்க்க முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாணவி தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தெரிவித்தே அவர் உயிரை மாய்க்க முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக வைத்தியசாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியரால் உயிரை மாய்க்க முயன்ற மாணவி. வவுனியாவில் பரபரப்பு சம்பவம்  பாடசாலை மாணவியொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளார்.இந்நிலையில் குறித்த மாணவி தனது உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மாணவி அண்மையில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த மாணவி உயிரை மாய்க்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து குறித்த ஆசிரியருக்கு வலயக்கல்வி அலுவலகத்தினால் இடமாற்றம் அளிக்கப்பட்டது. அத்துடன் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்கும் வண்ணம் குழு ஒன்றையும் நியமித்திருந்தது. இதேவேளை வலயக்கல்வி அலுவலகத்தால் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றையதினம் குறித்த மாணவி தனது வீட்டில் உயிரை மாய்க்க முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவி தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தெரிவித்தே அவர் உயிரை மாய்க்க முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைத்தியசாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement