• Sep 10 2025

தலைக்கவசம் அணியாமல் தந்தையுடன் சென்ற மாணவி பலி

Chithra / Sep 9th 2025, 8:49 am
image

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர்தர வணிகப் பிரிவில் பயிலும் மாணவியான ஏ.எம். சமுதி மல்ஷா என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கடந்த சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வீதியில் உள்ள ஆபத்தான இடத்தில் மோதியதில் மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் சிறுமி தலைக்கவசம் அணியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச்  சென்ற தந்தை கைது செய்யப்பட்டு, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தலைக்கவசம் அணியாமல் தந்தையுடன் சென்ற மாணவி பலி புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயர்தர வணிகப் பிரிவில் பயிலும் மாணவியான ஏ.எம். சமுதி மல்ஷா என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி கடந்த சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வீதியில் உள்ள ஆபத்தான இடத்தில் மோதியதில் மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளார்.விபத்து நடந்த நேரத்தில் சிறுமி தலைக்கவசம் அணியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.மோட்டார் சைக்கிளை செலுத்திச்  சென்ற தந்தை கைது செய்யப்பட்டு, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement