• May 04 2024

ஐ.நாவின் முக்கிய பிரதிநிதி- சஜித் தரப்பு திடீர் சந்திப்பு...!samugammedia

Sharmi / Aug 31st 2023, 12:20 pm
image

Advertisement

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸ் இந்நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமிர்த்தமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்நாட்டின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் பல கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டன.

நாட்டில் நிலவி வரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்குத் தெரியப்படுத்தினார்.

அவ்வாறே, தற்போதைய அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பிலும் அவர் மேலும் தெரியப்படுத்தினார்.


ஐ.நாவின் முக்கிய பிரதிநிதி- சஜித் தரப்பு திடீர் சந்திப்பு.samugammedia ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸ் இந்நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமிர்த்தமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.இந்நாட்டின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் பல கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டன.நாட்டில் நிலவி வரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்குத் தெரியப்படுத்தினார்.அவ்வாறே, தற்போதைய அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பிலும் அவர் மேலும் தெரியப்படுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement