• May 03 2024

வாகன இறக்குமதிக்கு அனுமதி...! அமைச்சர் வெளியிட்ட தகவல்...!samugammedia

Sharmi / Aug 31st 2023, 12:13 pm
image

Advertisement

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் 3,000 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜீப்கள் என குறிப்பிட்டார்.

ஆம்புலன்ஸ்கள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான வாகனங்கள், தூதரகங்களுக்குத் தேவையான வாகனங்கள் போன்ற பொதுத் தேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்காலத்தில் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி. அமைச்சர் வெளியிட்ட தகவல்.samugammedia வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.இறக்குமதி செய்யப்படும் 3,000 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜீப்கள் என குறிப்பிட்டார்.ஆம்புலன்ஸ்கள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான வாகனங்கள், தூதரகங்களுக்குத் தேவையான வாகனங்கள் போன்ற பொதுத் தேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதேவேளை, எதிர்காலத்தில் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement