• May 04 2025

மலையகத்தில் இடம்பெற்ற கோர விபத்து; இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Chithra / Mar 17th 2024, 6:09 pm
image

 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - புலியாவத்தை - சாஞ்சிமலை பிரதான வீதியில் புலியாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்த விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை (17) இடம்பெற்றது.

குறித்த விபத்தில் டிக்கோயா புலியாவத்தை மேல்பிரிவை சேர்ந்த 27 வயதுடைய தனபாலன் நிஷாந்தன் என்ற இளைஞனே பலியாகினார்.

விபத்தில் மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இளைஞனின் சடலம்,  சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் இடம்பெற்ற கோர விபத்து; இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு  நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - புலியாவத்தை - சாஞ்சிமலை பிரதான வீதியில் புலியாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்த விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் இன்று அதிகாலை (17) இடம்பெற்றது.குறித்த விபத்தில் டிக்கோயா புலியாவத்தை மேல்பிரிவை சேர்ந்த 27 வயதுடைய தனபாலன் நிஷாந்தன் என்ற இளைஞனே பலியாகினார்.விபத்தில் மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றைய தினம் பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.இளைஞனின் சடலம்,  சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now