• Jul 15 2025

கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம் - இருவர் பலி

Chithra / Jul 15th 2025, 9:25 am
image


மஹியங்கனை - பதுளை வீதியின் 17வது மைல்கல் அருகே பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்ன கால்வாயில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹியங்கனை பொலிஸார், மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், கிராம மக்கள் இணைந்து கால்வாயில் கவிழ்ந்த காரை விரைவாக மீட்டனர்.

பின்னர் காருக்குள் இருந்த இருவரும் அம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம் - இருவர் பலி மஹியங்கனை - பதுளை வீதியின் 17வது மைல்கல் அருகே பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்ன கால்வாயில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.மஹியங்கனை பொலிஸார், மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், கிராம மக்கள் இணைந்து கால்வாயில் கவிழ்ந்த காரை விரைவாக மீட்டனர்.பின்னர் காருக்குள் இருந்த இருவரும் அம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement