• Nov 28 2024

திருமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு...!

Sharmi / Oct 29th 2024, 6:37 pm
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது  மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று(29) இடம்பெற்றது.

வாக்களிப்பு நிலையங்களில் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள், தேர்தல் தொடர்பான சட்டங்கள், தேர்தலுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள், தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்கு சாவடியை அடைந்ததன் பின்னர் செய்ய வேண்டியவை, வாக்களிப்பு நிலைய முகவர்கள், ஒத்திகை நடாத்தல், முதலாவது செய்தி அறிவித்தல் வழங்குதல், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அல்லது அதனை சூழவுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட நடத்தைகள், வாக்கெடுப்பை முடிவுறுத்தல், வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டியை பொறியிடும் முறை போன்ற பல விடயங்கள் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரினால் தெளிவூட்டப்பட்டது.

இதன்போது தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் 133 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வில் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளரும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.கே.டி நிரஞ்சன் மற்றும் மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.



திருமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது  மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று(29) இடம்பெற்றது.வாக்களிப்பு நிலையங்களில் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள், தேர்தல் தொடர்பான சட்டங்கள், தேர்தலுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள், தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்கு சாவடியை அடைந்ததன் பின்னர் செய்ய வேண்டியவை, வாக்களிப்பு நிலைய முகவர்கள், ஒத்திகை நடாத்தல், முதலாவது செய்தி அறிவித்தல் வழங்குதல், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அல்லது அதனை சூழவுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட நடத்தைகள், வாக்கெடுப்பை முடிவுறுத்தல், வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டியை பொறியிடும் முறை போன்ற பல விடயங்கள் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரினால் தெளிவூட்டப்பட்டது.இதன்போது தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் 133 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.இச்செயலமர்வில் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளரும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.கே.டி நிரஞ்சன் மற்றும் மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement