• Apr 13 2025

யாழில் இடம்பெற்ற கோர விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி

Chithra / Apr 12th 2025, 7:38 am
image

 

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 8:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல் ஏற்றிவந்த டிப்பர் வாகனமொன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ரிப்பர் மீது மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்,

டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்ற நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.


குறித்த விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு நோயாளர் காவு வண்டிமூலம் கொண்டு செல்லப்பட்டபோது மரணமடைந்துள்ளார்.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி  யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 8:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கல் ஏற்றிவந்த டிப்பர் வாகனமொன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ரிப்பர் மீது மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்,டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்ற நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு நோயாளர் காவு வண்டிமூலம் கொண்டு செல்லப்பட்டபோது மரணமடைந்துள்ளார்.சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement