• Oct 29 2024

ஐ.நா.வின் உலகளாவிய வளர்ச்சி இலக்குகளை அடைதல்..!பணியமர்த்தப்பட்டுள்ள மனித ரோபோக்கள்..!samugammedia

Sharmi / Jul 6th 2023, 3:53 pm
image

Advertisement

ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய வளர்ச்சி இலக்குகளை அடையும் நோக்கில் மனித உருவ ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் புவி பாதுகாப்பு என அனைத்துலக  மக்களின் நலனுக்காக 17 நிலையான வளர்ச்சிகளை 2030 ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டின் போது  ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்திருந்தது.

ஆயினும், இலக்குகளை நோக்கிய பயணத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அதனை போராடி அடைவதற்காக ஏராளமான மனித உருவ ரோபோக்களை ஐ.நா. பணியமர்த்தியுள்ளது.

அந்த வகையில், இந்த ரோபோக்களின் மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு சுவிட்சர்லாந்தில் நாளைய தினம் நடத்தவுள்ளது.

அதையொட்டி, மாநாட்டில் பங்கேற்கவுள்ள ரோபோக்களின் கண்காட்சி ஜெனிவாவில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நாளைய தினம்  நடைபெறவுள்ள ரோபோக்கள் மாநாட்டிலே உலகில் முதல் முறையாக, ரோபோக்கள் குழு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் உலகளாவிய வளர்ச்சி இலக்குகளை அடைதல்.பணியமர்த்தப்பட்டுள்ள மனித ரோபோக்கள்.samugammedia ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய வளர்ச்சி இலக்குகளை அடையும் நோக்கில் மனித உருவ ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் புவி பாதுகாப்பு என அனைத்துலக  மக்களின் நலனுக்காக 17 நிலையான வளர்ச்சிகளை 2030 ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டின் போது  ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆயினும், இலக்குகளை நோக்கிய பயணத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அதனை போராடி அடைவதற்காக ஏராளமான மனித உருவ ரோபோக்களை ஐ.நா. பணியமர்த்தியுள்ளது. அந்த வகையில், இந்த ரோபோக்களின் மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு சுவிட்சர்லாந்தில் நாளைய தினம் நடத்தவுள்ளது. அதையொட்டி, மாநாட்டில் பங்கேற்கவுள்ள ரோபோக்களின் கண்காட்சி ஜெனிவாவில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நாளைய தினம்  நடைபெறவுள்ள ரோபோக்கள் மாநாட்டிலே உலகில் முதல் முறையாக, ரோபோக்கள் குழு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement